கிருஷ்ணகிரி மாவட்ட
பாமக நிர்வாகிகளுடன் நிறுவனர் ராமதாஸ் கலந்தாய்வு!
பாட்டாளி மக்கள் கட்சி வளர்ச்சிப் பணிகளின் ஒரு கட்டமாக கட்சி அமைப்பு அடிப்படையிலான மாவட்ட நிர்வாகிகளுடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் கலந்தாய்வு நடத்தி வருகிறார். அந்த வரிசையில் தருமபுரி கிழக்கு மற்றும் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடத்தினார்.
தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமை நிலையச் செயலாளர் இசக்கி படையாட்சி, தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வக்குமார், தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் பி.வி.செந்தில், மற்றும் 17 ஒன்றியங்கள், 5 பேரூர்களைச் சேர்ந்த 44 நிர்வாகிகளும், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட செயலாளர் த. ஆறுமுகம் மற்றும் 14 ஒன்றியங்கள், 3 நகரங்களைச் சேர்ந்த 34 நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் இரு மாவட்டங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியை வலுப்படுத்த மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.
No comments:
Post a Comment