வயதான மூதாட்டிக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 May 2022

வயதான மூதாட்டிக்கு வீட்டு மனை பட்டா வழங்க கோரி மனு

கிருஷ்ணகிரி செய்தி:

வீடு இல்லாத வயதான மூதாட்டிக்கு வீட்டுமனை பட்டn கேட்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பர்கூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.



தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் கே எம் சந்திரமோகன் இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார்.

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில் கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் சக்கில் நத்தம் கிராம பகுதியை சேர்ந்த சென்னையன். என்பவரின் மகள் சுகுணா 65-வயதுமூதாட்டியான இவர் தான் குடியிருக்கும் வீட்டிற்கு பல ஆண்டு காலமாக பலமுறை பட்டா கேட்டு விணைப்பித்தும்மாவட்ட நிர்வாகம் இவருக்கு தரவில்லை.

மாவட்ட ஆட்சியரிடம் அந்த வயதான மூதாட்டி மனு அளித்தும் மாவட்ட ஆட்சியத் அந்த மனுவை விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியும்.
வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை

தற்போது இந்த வயதான மூதாட்டி சொந்தமாக இருந்த அந்த ஒரே ஒரு ஓட்டு வீடும் 
உடைந்துவிட்டது.
தப்போது இந்த வயதான அம்மாவிற்கு வீடும் இல்லாமல் போய்விட்டது

எனவே
பர்கூர் வட்டாட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு செய்து இந்த வயதான மூதாட்டிக்கு பட்டா வழங்க வேண்டும் எனவும்கேட்டுக்
கொள்கிறோம்.என்று கூறினார்.

மேலும்
அதிகாரிகள் பட்டா வழங்காமல் காலம் தாழ்த்தினால் தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் பர்கூர் பஸ் நிலையத்தில் இருந்து பாதிக்கப்பட்ட இந்த வயதான மூதாட்டியுடன் நாங்கள் தலைமைச் செயலகத்தை நோக்கி நடைபயணமாக சென்றுதமிழக முதல்வர் அவர்களிடம் மனு அளிப்போம் என்றார்.

தொடர்ந்து
பர்கூர் வட்டாட்சியர் இல்லாததால்
 மண்டல துணை வட்டாட்சியர்பத்மாவதி அவர்களிடம் மனுவை அளித்தனர்.அப்போதுபர்கூர் வட்டார செயலாளர் கே.பி.கே. உமா சங்கர், மாவட்ட துணைத்தலைவர் ஜெய்சன் சமூக ஆர்வலர்கள் பழையபேட்டை குணாளன், கே.சக்தி உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad