9 மாத ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அரசு உதவி புரிய பெற்றோர்கள் கண்ணீர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 13 May 2022

9 மாத ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை அரசு உதவி புரிய பெற்றோர்கள் கண்ணீர்

ஓசூரில் 9 மாத ஆண் குழந்தைக்கு அறுவை சிகிச்சை தமிழக அரசு உதவி புரிய வேண்டும் என பெற்றோர்கள் வேண்டுகோள்.....

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே டைட்டான் டவுன் சிப் குடியிருப்பு பகுதியில்வசித்து வருபவர் சிவகுமார் இவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்

இவர் உறவினர் பெண்ணான பூங்கொடி 21 வயது என்பவரை திருமணம் செய்து மூன்றாண்டுகள் முடிந்த நிலையில் இவர்களுக்கு ரித்விக் என்ற 9 மாத ஆண் குழந்தை உள்ளது அக்குழந்தைக்கு 5வது மாதத்தில் சளி காய்ச்சல் தோல் வியாதி ஏற்பட்டுள்ளது இதற்கு பெங்களுருரில் உள்ள தனியார் மருத்துமனையில் சுமார் ரூ 12 லட்சம் வரை செலவு செய்தும் குணமடையவில்லை

தொடர் மேல்சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு அங்கு பரிசோதனை மேற்கொண்டதில் குழந்தைக்கு அலோஜெனிக் பெரிஃபெரல் ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்ய ரூபாய் 25 லட்சம் வரை செலவாகும் என மருத்துவர்கள் தெரிவித்ததால் குழந்தையை காப்பாற்ற வேண்டும் எனில் தங்களுக்கு போதிய வருமானம் இல்லாததால் தமிழக முதல்வர் உதவி புரிய வேண்டும் என கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad