தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 13 May 2022

தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை முகாம்

கீழ்குப்பம் கிராமத்தில் தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை முகாம்

_கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பாரூர் அருகேயுள்ள கீழ் குப்பம் கிராமத்தில் தமிழக அரசு வருவாய் பேரிடர் மேலாண்மை சார்பில் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா மற்றும் நில சம்மந்தமான பிரச்சனைகளுக்கு கிராம அளவில் தீர்வு காணும் சிறப்பு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கீழ் குப்பம் கிராம நிர்வாக அலுவலர் ராமு தலைமை வகித்தார், ஊராட்சி மன்ற தலைவர் சண்முகானந்தம் வட்ட துணை ஆய்வாளர் சிங்காரவேலன், கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன், முன்னிலை வகித்தனர், மண்டல துணை வட்டாட்சியர் சிவசங்கரன் வரவேற்றார், நிகழ்ச்சிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் அமிர்பாஷா, போச்சம்பள்ளி வட்டாட்சியர் இளங்கோ கலந்துகொண்டு பொதுமக்களிடையே 50 மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டு அதில் முதல்கட்டமாக 15 மனுக்களுக்கு தீர்வளித்து பயனாளிகளுக்கு சான்றிதல் வழங்கினார், மேலும் மீதமுள்ள மனுக்களுக்கு உடனடியாக விசாணை செய்து பட்டா வழங்க உத்தரவிட்டார். இந்த முகாமில் வருவாய் ஆய்வாளர் கவிதா, கிராம நிர்வாக அலுவலர்கள் கௌரி சங்கர், சுவேந்திரன், கிராம உதவியாளர்கள் செல்வராஜ், மாதன், ராஜேந்திரன், குப்புராஜ் வார்டு உறுப்பினர்கள், கிராம மக்கள் 100க்கும் மேற்ப்பட்டோர் கலந்துகொண்டனர். முகாம் நிறைவில் கிராம நிர்வாக அலுவலர் அருண் நன்றியுரை வழங்கினார்._

No comments:

Post a Comment

Post Top Ad