தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க முகாம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 14 May 2022

தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க முகாம்

அகரம் கிராமத்தில் ரேசன் கார்டு குறைதீர் முகாம்

தமிழகத்தில் அரசால் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளுக்கு விண்ணப்பிக்க, இருப்பிட சான்றுக்கான முக்கிய ஆவணமாகவும் ரேஷன் கார்டு பயன்படுகிறது. இந்நிலையில் பொது விநியோகத் திட்டத்தில் ரேஷன் கார்டுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தொடர்பான குறைதீர் முகாம், அந்தந்த வட்டத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடக்க தமிழக அரசு அறிவித்தது, அதன் அடிப்படையில் ரேஷன் அட்டையில் ஏற்படும் சிறிய அளவிலான பிழைகளை திருத்துவதிலும் பொதுமக்களுக்கு பல்வேறு பிரச்சனைக்ளும் உள்ளன. இதை தவிர்க்கும் விதமாக இன்று போச்சம்பள்ளி வட்டம் அகரம் கிராமத்தில் ரேசன் கார்டு குறைதீர் முகாம் நடைபெற்றது, இந்த முகாமிற்கு அகரம் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார், வட்ட வழங்கல் அலுவலர் அண்ணாதுரை பொதுமக்களிடையே 85 மனுக்களை பெற்று அதற்க்கான தீர்வுகளை உடனடியாக தீர்வு செய்து podhumakkalidaiyeபொதுமக்களிடையே சான்று வழங்கினார், இந்த முகாமில் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை முதலியவை தொடர்பான நடைமுறைகளில் ஏற்படும் சிக்கல்களுக்கு உடனடியாக தீர்வளிக்கப்பட்டது. காலை 10.00 மணி துவங்கப்பட்ட முகாம் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் வட்ட வழங்கல் முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெய்கணேஷ், வட்ட வழங்கல் பொறியாளர் தனசேகரன், அகரம் நியாயவிலைக்கடை விர்ப்பனையாளர் ஜானகி, குடிமேனஹள்ளி நியாயவிலைக்கடை விர்ப்பனையாளர் மாதேஷ் மற்றும் கிராம மக்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad