வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ் பெற கட்டு சோறுடன் வந்த பொதுமக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 May 2022

வருவாய் ஆய்வாளரிடம் சான்றிதழ் பெற கட்டு சோறுடன் வந்த பொதுமக்கள்

போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் சான்றிதல் பெற கட்டுசோறு கட்டிவந்து காத்துக்கிடக்கும் பொதுமக்கள்

 
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவிற்கு உட்பட்ட பகுத்திகளில் நான்கு வருவாய் கிராமங்ககள் மத்தூர், போச்சம்பள்ளி, பாரூர், நாகரசம்பட்டி ஆகிய வருவாய் கிராமங்கள் உள்ளன இதில் போச்சம்பள்ளி வருவாய் கிராமத்தில் உள்ள வருவாய் ஆய்வாளர் சரிவர அலுவலகத்திற்கு வருவதில்லை என்று குற்றசாட்டுகள் தொடர்ந்து எழுந்துவருகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடத்திவரும் நிலையில் மாவட்ட ஆட்சியரின் கீழ் முக்கிய பிரிவில் பணியாற்றிவரும் அதிகாரியின் உதவியால் இவர் மீது எவ்வித நடவடிக்கையும் இலலாமல் போகிறது, இந்நிலையில் தற்பொழுது தமிழகமெங்கும் உள்ள தனியார் பள்ளியில் 25% ஆர்டிஇ இலவச படிப்பிற்கு குழந்தைகளுக்கு சாதி சான்றிதல் மற்றும் இருப்பிட சான்றிதல் தேவைப்படுவதால் ஆன்லைனில் விண்ணப்பித்து கிராம நிர்வாக அலுவலர் பரிந்துரை செய்து இன்றுவரை சான்று வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறார், மேலும் தற்பொழுது மருத்துவ நுழைவு தேர்வு NEET தேர்வு எழுத்த OBC சான்று வேண்டி பல மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில் அவர்களது சான்றுகளும் கிடப்பில் உள்ளது. இதுகுறித்து கேட்க பெற்றோர் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்று பார்த்த போது அலுவலகம் பூட்டியே இருந்துள்ளது. மேலும் அலுவலகத்தில் மின் விளக்குகள் எறிந்த நிலையிலும் மின் விசிறிகள் அணைக்காமல் இஅயங்க்கிக்கொண்டும் இருந்துள்ளது. காலை வந்த ஒருவர் அலுவலகத்தை திறந்து சுத்தம் செய்துவிட்டு மீண்டும் பூட்டிவிட்டு சென்றதாகவும், ஆர்ஐ வருவாங்கன்னு சொல்லிட்டு சென்றுள்ளார். கொடமாண்டபட்டியை சேர்ந்த ஷேக் முஸ்தகீம் ஷே என்பவர் விண்ணப்பித்து கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் பணக்காட்டூர் கிராமத்தை சேர்ந்த மாதேஸ்வரன் என்பவரும் அதேபோல் சான்றிதழுக்கு விண்ணப்பித்து காத்துக்கிடக்கிறார், மேலும் இவர்கள் வருவாய் ஆய்வாளரை கான கட்டு சோறு கட்டி வந்து காத்துக்குக்கிடக்கும் அவலநிலையும் ஏற்ப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா அலை முடிந்து கூலி வேளை கூட கிடைக்காமல் அப்பாவி ஏழை மக்கள் திண்டாடி வரும் சூழ்நிலையில், வருவாய்த்துறை வழங்கும் அனைத்து சான்றிதழ்களும் ஆன்லைன் மூலமாக வழங்குவதாக கூறப்படும் நிலையில் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் மட்டும் அப்பாவி பொதுமக்களை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் வந்து காத்துக்கிடக்க வைக்கும் அவலம் தொடர்ந்து நடந்தேறி வருகிறது. இவர்கள் மீது கண்ணியமிகு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க எடுப்பாரா என்று போச்சம்பள்ளி பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad