போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளரை மாற்றக்கோரி கிராம மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திற்கு வருவதில்லை என்றும் சான்றிதழ்களை வேண்டுமென்றே நிறுத்திவைத்து காலம் தாழ்த்தி வருவதாகவும் இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிப்படைவதாகவும் தற்பொழுது தமிழகமெங்கும் உள்ள தனியார் பள்ளியில் 25% ஆர்டிஇ இலவச படிப்பிற்கு குழந்தைகளுக்கு சாதி சான்றிதல் மற்றும் இருப்பிட சான்றிதல் தேவைப்படுவதால் ஆன்லைனில் விண்ணப்பித்து சான்று வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் மேலும் தற்பொழுது மருத்துவ நுழைவு தேர்வு NEET தேர்வு எழுத்த OBC சான்று வேண்டி பல மாணவர்கள் விண்ணப்பித்திருக்கும் நிலையில் அவர்களது சான்றுகளும் கிடப்பில் உள்ளதாகவும் இதுகுறித்து கேட்க பெற்றோர் போச்சம்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் சென்று பார்த்த போது அலுவலகம் பூட்டியே கிடப்பதாவும், மேலும் இரவு வேளைகளில் தொடர் மண் மற்றும் எம்சென்ட், ஜல்லி, கருங்கல் உள்ளிட்டவை பெருமளவு கடத்தல் நடைபெறுவதாகவும் இந்த கடத்தல் வண்டிகள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை கடந்தே செல்ல்வதாவும் இவரை மாற்றி வேறொரு வருவாய் ஆய்வாளரை நியமிக்க வேண்டுமென அனைத்து கட்சி மற்றும் கிராம மக்கள் சார்பில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் மனு அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட வருவாய் கோட்டாட்சியர் மனு மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment