அணைப்பகுதியில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 6 May 2022

அணைப்பகுதியில் உள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற கோரிக்கை

கர்நாடக மற்றும் ஒசூர் பகுதிகளில் பெய்த கனமழையால் கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரிப்பு: அணையை சூழ்ந்துள்ள ஆகாயதாமரையை அகற்ற கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கனமழை பெய்து வருகிறது..

கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை எதிரொலியாக ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு தென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து கணிசமாக அதிகரித்து

கெலவரப்பள்ளி அணையின் மொத்த கொள்ளளவான 44.28அடிகளில் 40.18 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது

அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, வினாடிக்கு 400 கனஅடிநீர் வரத்தாகவும் அது அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது

நீர்வரத்து கணிசமாக அதிகரித்திருப்பதால் ஆகாய தாமரைகள் அணையை சூழ்ந்துள்ளதால் பச்சை போர்த்தியது போல் காணப்படும் ஆகாய தாமரையை அப்புறப்படுத்த வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

No comments:

Post a Comment

Post Top Ad