வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே. சாமி தலைமையில் வாகன தணிக்கை - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 8 May 2022

வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே. சாமி தலைமையில் வாகன தணிக்கை

கிருஷ்ணகிரியில் வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே. சாமி தலைமையில் வாகன தணிக்கை


கிருஷ்ணகிரி,மே.8- கிருஷ்ணகிரியில் போக்குவரத்து ஆணையர் நடராஜன் ஆணைப்படி வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன் அறிவுறுத்தலின்படி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் கே.வி.கே.சாமி,தலைமையில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டாரங்களில் இயக்கும் தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஆரன்கள் பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பான சோதனை மேற்கொள்ளப்பட்டு அவ்வாறு ஏர்ஆரன் பொருத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டு மீண்டும் வாகனங்களில் பொருத்தப்படாத வண்ணம் முற்றிலுமாக அகற்றப்பட்டது.மேலும் வாகன ஓட்டுனர்களுக்கு இவ்வாறான ஏர் ஆரன்கள் வாகனங்களில் பொருத்த கூடாது என எச்சரிக்கப்பட்டது,இது தொடர்பான தணிக்கை தொடர்ந்து மேற்கொண்டு கண்காணிக்கப்படும் என என வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே.சாமி , தெரிவித்தார். உடன் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad