டாஸ்மாக் பாராக மாறிய பேருந்து நிலையம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 9 May 2022

டாஸ்மாக் பாராக மாறிய பேருந்து நிலையம்


பேருந்து வருமா என காத்துக் கொண்டிருக்கும் வேப்பனப்பள்ளி பேருந்து நிலையத்தின் அவல நிலை. குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருவதால் பொதுமக்கள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஆனது தமிழகம் ஆந்திரா மற்றும் கர்நாடக மூன்று மாநிலங்களின் ஒரு சங்கமிக்கும் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது. இந்த பகுதிகளிலிருந்து தினம் தினம் தமிழகம் மட்டுமில்லாமல் ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில கிராம பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேப்பனப்பள்ளி வந்து செல்கின்றனர். மேலும் வேப்பனபள்ளியில் இருந்து கிருஷ்ணகிரி, ஓசூர் பாகலூர், பேரிகை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, மாலூர், கேஜிஎப், கோலார் மற்றும் ஆந்திர மாநிலங்கள் குடிப்பபள்ளி, குப்பம், சித்தூர், திருப்பதி, ஆகிய முக்கிய நகரங்களுக்கும் தொழில் நகரங்களுக்கும் செல்லக்கூடிய சாலைகள் உள்ளதால் இப்பகுதியில் வாகனங்கள் வந்து செல்கின்றன. இதனால் வேப்பனப்பள்ளி நகரத்தில் எப்போதும் பரபரப்பாக கூட்ட நேரிசலும் காணப்படும். 


இந்தநிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு வேப்பனப்பள்ளி போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பல கோடி ரூபாயில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு ஒரு சில நாட்களே பேருந்து நிலையம் செயல்பாட்டில் இருந்து வந்தது. இதன் பிறகு பேருந்து நிலையத்தில் உரிய பராமரிப்பின்றி கழிப்பறை மற்றும் குடிநீர் வசதியின்றி அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் இப்பகுதியில் பொதுமக்களும் பயணிகளும் பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்கு வருவதில்லை. 

மேலும் கர்நாடகா ஆந்திரா மற்றும் தமிழக பேருந்துகளும் பேருந்து நிலையத்தில் பக்கமே திரும்பிப் பார்க்காமல் சாலை மார்கமகவே வந்து செல்கின்றன. வேப்பனப்பள்ளி நகரத்தில் குறுகிய சாலை என்பதால் போக்குவரத்து நெரிசல் தினம்தினம் அதிகரித்து வரும் நிலையில் பேருந்துகள் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டு பொதுமக்களை ஏற்றியும் இறக்கியும் செல்கின்றனர். பேருந்துகள் சாலையோரத்தில் நிறுத்தப்படுவதால் கடைகளில் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையோர கடைகள் ஆக்கிரமித்து இருப்பதால் பேருந்துகளும் வாகனங்களும் சாலையை கடக்க முடியாமல் நீண்ட நேரம் அணிவகுத்து நின்று மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. 

மேலும் தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மழைக்காலங்களில் பேருந்து நிலையம் செயல்படமால் இருப்பதால் சாலையோரங்களிலும் கடைகளிலும் நின்று கொண்டிருக்கும் பயணிகளும் பொதுமக்களும் பல மணி நேரம் வெயிலிலும் மழையிலும் நனைந்தும் காய்ந்தும் பேருந்துகளில் சென்று வரும் நிலை ஏற்பட்டு வருகிறது. 

மேலும் பேருந்து நிலையம் யாரும் இல்லாமல் தனித்து விடப்படிருப்பதால் அப்பகுதியில் குடி பிரியர்களின் கூடாரமாக மாறி உள்ளது. 11 மணிகெல்லாம் குடிமகன்கள் பேருந்து நிலையத்தில் வந்து ஆட்கள் யாரும் இல்லாததால் அங்கு சாவகாசமாக அமர்ந்து குடித்து வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் பேருந்து நிலையத்தில் மது பாட்டில்களை குவித்தும் உடைந்து இருப்பதால் நடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்ட வருகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் வாகன நீழற்கூறமாகவும் கூடமாகவும், ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் பொதுமக்களின் இடமாகவும் மாறி வருகிறது. 


பேருந்து வருமா என பயந்து 15 வருடங்களாக தனித்து காத்துக்கொண்டிருக்கிறது பேருந்து நிலையம். பாரமரிப்பு இன்றி முட்புதர்கள் முளைத்தும், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் இன்றியும் இடிந்து பராமரிப்பின்றி காணப்படுவதாக இப்பகுதி பொதுமக்கள் கடும் வேதனை அடைந்துள்ளனர்.

சாலையிலேயே நின்று செல்லும் அனைத்துப் பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றி போக்குவரத்து நெரிசலை குறைத்து பொதுமக்களுக்கு ஏதுவாகவும் நிழல்கூட அமைத்து பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியை மேம்படுத்தி, சுகாதாரத்தை மேம்படுத்தி பேருந்து நிலையத்தில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் மற்றும் வேப்பனப்பள்ளி நகரத்தின் நடுவே வேகதடைகள் அமைக்க வேண்டும் என்பதே இப்பகுதி பொதுமக்களும் பயணிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

No comments:

Post a Comment

Post Top Ad