கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 14 May 2022

கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு

அகரம் அருகே கழிவுநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு : கிராம மக்கள் எதிர்ப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் கிராமத்தில் 500க்கும் மேற்ப்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர், இந்த கிராம மக்கள் பயன்படுத்தும் கழிவுநீரை சாலையோரம் அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் மூலம் வெளியேற்றி வந்தனர், இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் கழிவுநீர் கால்வாய்களை அதே கிராமத்தை சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்கப்பட்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் அடைத்து விட்டதாக அதிகாரிகள் மற்றும் ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் மனு அளித்தனர், புகாரின்பேரில் ஊராட்சி மன்ற தலைவர் ராமமூர்த்தி கால்வாய் தூர்வாரும் பணியில் ஈடுபட்டார் அப்பொழுது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கால்வாய் தூர்வாரும் பணி நிறுத்திவைக்கப்பட்டது. இந்த தகவலறிந்த கிராம மக்கள் ஒன்றுதிரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த கிராம நிர்வாக அலுவலர் ராகேஷ்சர்மா, நாகரசம்பட்டி போலிசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து கிராம மக்களிடம் பேச்சிவார்த்தை நடத்தி கழிவுநீர் செல்ல ஏற்ப்பாடு செய்வதாக உறுதியளித்ததின் பேரில் அங்கிருந்து கலைந்து சென்றனர், இச்சம்பவம் இப்பகுதியில் சிறிதுநேரம் பரப்பரப்பு ஏற்ப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad