குருபரப்பள்ளி அருகே 3 லட்சம் மதிப்புள்ள 500 கிலோ குட்கா பொருள் கடத்தி வந்தவர் கைது. வாகனம் பறிமுதல்*
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி காவல் நிலையம் போலிசார் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மைதா மூட்டைகளுக்கு இடையே அரை டன் குட்கா பொருட்கள் மறைத்து வைத்து கர்நாடகவில் இருந்து வேலூர் மாவட்டத்திற்கு கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் சோதனையில் சுமார் 3 லட்சம் மதிப்புடைய குட்கா பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த திருசெந்தூரை சேர்ந்த குணசேகரன் 37 என்பவரை கைது செய்த போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment