கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் முப்பெரும் விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 6 June 2022

கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் முப்பெரும் விழா.

இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகமான நேரு யுவ கேந்திரா -கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் உலக மிதிவண்டி நாள், உலக சுற்றுச்சூழல் தினம் மற்றும் இணைய வழி குற்ற விழிப்புணர்வு நாள் ஆகிய முப்பெரும் விழாவானது வேப்பனப்பள்ளி அருகே உண்டியல்நத்தம் குக்கிராமத்தில் நடைபெற்றது. 


இந்நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் கணக்கு மற்றும் நிகழ்ச்சி மேற்பார்வையாளர் திரு காதர் அவர்கள் தலைமை தாங்கி சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்தும் உடல் ஆரோக்கியம் மற்றும் இணையவழி குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு தொடர்பாக பேசினார். இவ்விழாவிற்கு உண்டியல்நத்தம் ஊராட்சி தலைவர் திரு.கலீல் அவர்கள் முன்னிலை வகித்தார்.  சமூக ஆர்வலரும் கிருஷ்ணகிரி இந்தியன் வங்கியின் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் பயிற்றுநருமான பொறியாளர் திரு.ந.பிறைசூடன் அவர்கள் சூழல் காப்போம் குறித்தும், இலவச சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் குறித்தும் பேசினார்.  


அதைத்தொடர்ந்து மிதிவண்டி பேரணியும் மரக்கன்றுகள் நடும் நிகழ்வும் நடைபெற்றது. முன்னதாக ஏபிஜெ அப்துல் கலாம் இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவர் திரு பாலாஜி அவர்கள் வரவேற்று பேசினார். இயற்கை ஆர்வலர் திரு சாதிக் அவர்கள் இயற்கை பாதுகாப்பு குறித்து பேசினார். தேசிய இளைஞர் படையை சேர்ந்த திரு நவீன் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிறைவாக நேரு யுவ கேந்திராவின் செல்வி லலிதா அவர்கள் நன்றி கூறினார். 

No comments:

Post a Comment

Post Top Ad