27 இலட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 2 July 2022

27 இலட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

குருப்பரப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்;ஒருவர் கைது;15 பேர் தலைமறைவு

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே கோழிப்பண்ணையில் பதுக்கி வைத்திருந்த 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 டன் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் 15 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

கர்நாடகாவில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக தமிழ்நாடடிற்கு தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் கடத்தி செல்லப்படுவதாக கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ் குமார் தாக்கூர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தமிழக- கர்நாடகா -ஆந்திர எல்லையோரம் உள்ள நடு சாலை அருகே மேல் கொண்டப்பநாயக்கனப்பள்ளி கிராமத்தில் சதீஷ் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் அதிக அளவில் குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குருபரப்பள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது தகவலின் சென்ற போலீசார் கோழிப் பண்ணையில் சோதனை செய்தனர். அப்போது 100 மூட்டைகளில் 27 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 4 டன் தடை செய்யப்பட்ட குட்கா, பான் மசாலா, உள்ளிட்டவையை போலீசார் மீட்டனர்

No comments:

Post a Comment

Post Top Ad