ஓசூர் - கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 August 2022

ஓசூர் - கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

8000 ஏக்கர் புன்செய் நிலம் பாசனம் பெற இன்று முதல் 120 நாட்களுக்கு கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக நீர் திறப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையின் வலது மற்றும் இடதுபுற கால்வாய்கள் மூலம் ஆண்டிற்கு இரண்டு போகம் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுவதால் 8000 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் பாசனம் செய்து வருகின்றனர்.

முதல் போக பாசனத்திற்காக ஜூலை மாத இறுதி வாரத்தில் தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம் என்கிற நிலையில் இன்று (ஆகஸ்ட் 1) கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக 120 நாட்கள் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கெலவரப்பள்ளி நீர்தேக்க அணையிலிருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீரை கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலுவலர் மகேசுவரி ,ஒசூர் MLA பிரகாஷ், மேயர் S.A.சத்யா ஆகியோர் மலர்தூவி நீரை திறந்து வைத்தனர்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரண்டு கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

 வலதுபுற கால்வாய் மூலம் 2082 ஏக்கர்களும், இடதுபுற கால்வாயால் 5918 ஏக்கர்களும் பயனடைய உள்ளன.
 முத்தாலி,தொரப்பள்ளி,பேரண்டப்பள்ளி,காமன்தொட்டி,அட்டகுறிக்கி உள்ளிட்ட 22 கிராமங்களில் உள்ள 8000 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசனம் பெற உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையின் மொத்த நீர்மட்ட அளவு 44.28 அடிகளில், தற்போது 42 அடி நீர் இருப்பு உள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad