பெற்ற மகனால் விரட்டப்பட்ட மூதாட்டிக்கு உதவிகள் குவிந்தன - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 August 2022

பெற்ற மகனால் விரட்டப்பட்ட மூதாட்டிக்கு உதவிகள் குவிந்தன

சூளகிரியில் பெற்ற மகனால் விரட்டப்பட்ட மூதாட்டி : ஆதரவின்றி தவித்த வந்த நிலையில் பாஜகவின் மாநில துணைத்தலைவர் நலம் விசாரித்து உதவி புரிந்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வாணி தெருவை சேர்ந்தவர் ராஜம்மா
இவருக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு, திடீரென இரண்டு கால்கள் செயலிழந்து போக, கணவரும் சில நாட்களில் காலமானார்

ஒரே மகனை கால்கள் செயலிழந்த நிலையில், வளர்த்து திருமணம் செய்து வைத்துள்ளார்.. மனைவி பிள்ளைகள் என்றானதும் மூதாட்டி எதற்கு என மகன் விரட்டிவிட்டார்..

ஆதரவின்றி தவித்த மூதாட்டி, 2010 ஆம் ஆண்டு அப்போதைய தூணை முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்களால் வழங்கப்பட்ட இலவச வீட்டுமனையில் ராஜம்மா குடிசை அமைக்க சென்றபோது அந்த இடத்தின் பத்திரத்தை அவரது மகன் அடமானம் செய்திருப்பதாக கூறி அப்பகுதியினர் ராஜம்மாவை விரட்டி உள்ளனர்..

கணவனை இழந்து, பெற்ற மகன் மற்றும் மருமகள் என மற்றவர்களின் ஆதரவின்றி
சூளகிரி முஸ்லிம் தெரு பகுதியில் வாடகை கடையில் ஆடைகளுக்கு இஸ்திரி செய்து, அங்கேயே குடிதனம் நடத்தி வருகிறார்..



இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத்தலைவர் நரேந்திரன் மற்றும் மாவட்ட இளைஞர் அணி துணை தலைவர் இணைந்து மூதாட்டியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் .

மேலும் ஆதரவின்றி உணவுக்காக கஷ்டபடும் மூதாட்டிக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக உதவிகள் செய்தனர்

No comments:

Post a Comment

Post Top Ad