ஏரி உபரிநீரில் மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 August 2022

ஏரி உபரிநீரில் மீன்களை அள்ளி சென்ற கிராம மக்கள்

சூளகிரி அருகே ஏரி நிறம்பி வெளியேறும் உபரிநீரில் மீன்களை பிடிக்க குவிந்த மக்கள்: 100க்கும் கிராம மக்கள் மீன்களை மகிழ்வுடன் அள்ளி சென்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டத்திலேயே அதிகப்படியாக சூளகிரி வட்டத்தில் 86மிமீட்டர் மழை பதிவாகி, பல கிராமங்களில் உள்ள ஏரிகளும் குளங்களும் நிறம்பி வழிகின்றன.

இந்தநிலையில் சூளகிரி அடுத்த தியாகரசனப்பள்ளி ஊராட்சி நல்லராலப்பள்ளி கிராமத்தில் உள்ள ஏரி முழுக்கொள்ளவை அடைத்து உபரிநீர் வெளியேறுகிறது
ஏரியில் நீர் செல்வதால் மீன்களும் வெளியேறி வருகிறது ஏரி நிரம்ப்பி மீன்கள் வெளியேறும்
தகவல் காட்டுத்தீ போல் அப்பகுதியில் பரவியதால் நல்லராலப்பள்ளி கிராம மக்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகள் என 100 க்கும் மேற்ப்பட்டோர் மீன்களை பிடிக்க வலைகளுடன் குவிந்தனர்..
மீன்களை பொதுமக்கள் போட்டிப்போட்டுக்கொண்டு ஆர்வத்துடன் அள்ளி சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

No comments:

Post a Comment

Post Top Ad