கனமழையால் வீடுகளில் புகுந்த மழைநீர் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 August 2022

கனமழையால் வீடுகளில் புகுந்த மழைநீர்

நாடுவனப்பள்ளி கிராமத்தில் கனமழையால் வீடுகளுக்குள் புகுந்த மழை நீர். 20 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் நீரில் மூழ்கியதால் இரவு முழுவதும் காத்திருந்த அவலம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை கன மழை வெளுத்து வாங்கியது. இந்த கனமழையால் வேப்பனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் அனைத்து இடங்களிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் நாடுவணபள்ளி கிராமத்தில் பெய்த கனமழையால் இப்பகுதியில் தண்ணீர் செல்ல முடியாமல் தெருக்களில் தேங்கி நின்றது. தொடர்ந்து கனமழை பெய்து வந்த நிலையில் 20க்கு மேற்பட்ட வீடுகளில் மழைநீர் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் தங்கள் உடைமைகளை எடுத்து கொள்ள முடியாமல் இரவு முழுவதும் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர். விடிய விடிய காத்திருந்த மக்கள் தண்ணீரை படிப்படியாகக் வெளியேற்றி வருகின்றனர். 20க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மழை நீரில் மூழ்கியதால் விவசாயிகள் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு செல்லும் மாணவிகள் முதல் வேலைக்கு ஆட்கள் வரை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் வீடுகளில் மழை நீர் புகுந்ததால் வீடுகளை பூட்டிவிட்டு ஒரு நேர வீடுகளுக்கு சென்று உள்ளனர்.காலையில் ஊர் மக்கள் தகவல் தெரிவித்த பின்பு வேப்பனப்பள்ளி அதிமுக ஒன்றியச் செயலாளராக ரகுநாத் மற்றும் பள்ளி ஒன்றிய குழு தலைவர் சரோஜினி பரசுராமன், ஒன்றிய குழு உறுப்பினர் நரசிம்மன் மற்றும் நிர்வாகிகள் கௌரிசங்கர் வந்து நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் இதுவரை ஊராட்சி மன்ற தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அந்த இடத்தை பார்க்காமல் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக ஒரு மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் இந்த தண்ணீர் புகுந்த இடத்தை உடனடியாக சீரமைத்து தண்ணீர் புகாதவாறு சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கிராம மக்கள் அதிகாரி கோரிக்கை வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad