பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 1 August 2022

பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

வேப்பனப்பள்ளியில் பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா. பாஜக மாநில துணை தலைவர் நாகேந்திரன் பங்கேற்பு 

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் இன்று பாஜக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பாஜகவின் மாநில துணைத் தலைவர் நாகேந்திரன் தலைமையில் ஒன்றிய செயலாளர் ஸ்ரீதர் முன்னிலையில் பாஜக பொதுக்குழு உறுப்பினர் பார்ப்பனா சீனிவாசகவுடு மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் நாகேந்திரன் பாஜகவின் 8 ஆண்டு சாதனைகளை குறித்து பொது மக்களுக்கு விளக்கினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்தவர்களுக்கு சால்வை அனைத்து கட்சியில் இணைத்து கொண்டார். தொடர்ந்து நாளை நடக்க உள்ள அவரது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் கேக் வெட்டி மாலை அணிவித்து பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.தொடர்ந்து இந்த கூட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பெண்களுக்கு 160 குடும்பப் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கியும், 170 பேருக்கு இலவச கிசான் கார்டு அட்டையும் 100 நபர்களுக்கு மத்திய அரசின் உயிர் காப்பீட்டுத் இத்திட்டத்தின் அட்டை வழங்கினார். 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பாஜக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad