வாழை தோட்டங்களை நாசம் செய்த காட்டு யானைகள் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 September 2022

வாழை தோட்டங்களை நாசம் செய்த காட்டு யானைகள்


வேப்பனப்பள்ளி அருகே மூன்று காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம். பொதுமக்கள் விவசாயிகள் பீதி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே உள்ள மகாராஜாகடை வனப்பகுதியில் பத்துக்கு மேற்பட்ட காட்டு யானைகள் முகாம்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக கொங்கனபள்ளி மற்றும் சிகரமாகனபள்ளி வனப்பகுதியில் யானைகள் ஏதும் இல்லாமல் விவசாயிகளும் பொதுமக்களும் நிம்மதி அடைந்திருந்தனர். இந்த நிலையில் நேற்று இரவு மகராஜகடை வனப்பகுதியில் இருந்து ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் வழியாக தமிழக வனப்பகுதிக்கு மூன்று காட்டு யானைகள் வந்துள்ளது. இந்த காட்டு யானைகள் வேப்பனப்பள்ளி அருகே உள்ள உண்டிகைநத்தம் கிராமத்தில் புகுந்து லோகேஷ் என்பவருடைய வாழைத்தோட்டத்தில் உள்ள வாழை தோட்டத்தில் 10 த்திற்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து நாசம் செய்துள்ளது. மேலும் அதே பகுதியில் உள்ள சுரேந்திரன் என்பவருடைய கத்திரிக்காய் தோட்டத்திலும் புகுந்து கத்திரிக்காய் செடிகளை மிதித்து நாசம் செய்துள்ளது. அதிகாலை வந்து விவசாயிகள் பார்த்தபோது வாழை மரங்களையும், கத்திரிக்காய் செடிகளையும் யானைகள் மிதித்து நாசம் செய்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள் 3 யானைகளை வனப்பகுதிக்கு விரட்டி அடித்து வருகின்றனர். மேலும் மீண்டும் கொங்கனப்பள்ளி சிகராமகனப்பள்ளி வனபகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால் பகுதி வனப்பகுதி ஒட்டி உள்ள கிராம மக்களுக்கும் பொது மக்களுக்கும் விவசாயிகளுக்கும் வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  இரவு நேரங்களிலும் விவசாய நிலங்களில் பொதுமக்கள் விவசாயிகள் யாரும் தங்க வேண்டாம் எனவும் வனப்பகுதிக்கு ஆடுகள் மாடுகள் மேய்ச்சலுக்கு வர வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.மேலும் 10க்கும் மேற்பட்ட வனத்துறை உழியர்கள் காட்டு யானைகளை வெறு வனப்பகுதிக்கு விரட்ட தீவிரமாக கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுப்பட்டு வருகிறனர்.

No comments:

Post a Comment

Post Top Ad