துருவ கத்திரிக்காய் விளைச்சல் அமோகம் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 10 September 2022

துருவ கத்திரிக்காய் விளைச்சல் அமோகம்


வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் துருவ கத்திரிக்காய் விளைச்சல் அமோகம். பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்றுமதி மும்முரம்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வருடமாக நீர் வளம் நன்றாக இருப்பதால் அனைத்து பகுதிகளிலும் விவசாயம் அமோகமாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் காய்கறிகள், பூக்கள் சாகுபடி விவசாயிகளின் பெரும் வாழ்வதாரமாக இருந்து இருவருகிறது. இம்முறை கத்திரிக்காய் விளைச்சலில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது புதிய வகை துருவ வகையான கத்திரிக்காயை விவசாயிகள் புதிய முயற்சி மேற்கொண்டு விவசாயம் செய்து வருகின்றனர். இந்த கத்திரிக்காய் வகைகள் நன்றாக சாகுபடி செய்யப்பட்டு அமோகமாக விளைச்சல் செய்யப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் தற்போது கத்திரிக்காய்களை அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் துருவா வகை கத்திரிக்கையானது தற்போது கிலோ 20 முதல் 25 ரூபாய் வரையும் 15 கிலோ கொண்ட கூடையானது 350 முதல் 400 வரையும் விற்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த வகை கத்திரிக்காய்கள் வேப்பனப்பள்ளியிலிருந்து பல்வேறு மாநிலங்களுக்கும் மாவட்டங்களுக்கும் தினமும் 2 முதல் 3 டன்கள் வரை அறுவடை செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டு வரும் நிலையில் கத்திரிக்காய் விளைச்சல் கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தற்போது துருவ வகை கத்திரிக்காய் தரம் பிரித்து ஏற்றுமதி செய்யும் முனைப்பில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad