அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கல்வி செங்கோல் விருது - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 13 September 2022

அரசுப்பள்ளி ஆசிரியருக்கு கல்வி செங்கோல் விருது

சூளகிரியில் அரசு பள்ளி ஆசிரியருக்கு கல்வி செங்கோல் விருது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொழில் கல்வி ஆசிரியராக கணேசன் என்பவர் பணியாற்றி வருகிறார்.
2021 - 2022 ஆம் கல்வி ஆண்டின் தனியார் தொலைகாட்சி மற்றும் தமிழ் கலை இலக்கிய மன்றத்தின் சார்பில் திருச்சியில் நடந்த விழாவில் கல்வி செங்கோல் விருதை ஆசிரியர் கணேசன் பெற்றார்.

2018 ஆம் ஆண்டு தமிழக அரசால் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது, மேலும் 2016ஆண்டு கல்வி செம்மல் விருது வழங்கப்பட்டது.

மேலும் தற்போது கிராமப்புற மாணவர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு முன்றேற்றத்திற்க்கு உறுதுணையாக இருந்த கணேசன் ஆசிரியருக்கு கல்வி செங்கோல் விருதை வழங்கியது குறிப்பிடதக்கது. இந்நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகளும் , சக ஆசிரியர்களும், சூளகிரி திமுக முக்கிய நிர்வாகிகளும் கல்வி செங்கோல் விருது வாங்கிய ஆசிரியருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது

No comments:

Post a Comment

Post Top Ad