இரு சக்கர வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 September 2022

இரு சக்கர வாகனங்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.

வேப்பனப்பள்ளி அருகே தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட வந்தவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் தர்மராஜா நகரை சேர்ந்த மணிகண்டன் 29 என்பவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று குந்தாரப்பள்ளி வார சந்தைக்கு ஆடு விற்பனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். சந்தையில் அருகே உள்ள வினயாகர் கோயிலின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு ஆடுகளை விற்க சந்தைக்குச் சென்றுள்ளார். மணிகண்டன் ஆடுகளை விற்றுவிட்டு வந்து பார்த்தபோது தனது இருசக்கர வாகனத்தை காணவில்லை என்பதை அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் அங்கே தேடிக் கொண்டிருந்தபோது மணிகண்டனின் இருசக்கர வாகனத்தை மற்றொருவர் எடுத்துச் செல்வதை கண்டு பொதுமக்கள் சிலர் வாகனத்தை நிறுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த நபரின் வாகனத்தை நிறுத்தாமல் அதிவேகமாகச் சென்றதால் பின்னே துரத்தி சென்று பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த நபரை பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து குருபரப்பள்ளி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த போலிசார் அந்த நபரை காவல நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரனை மேற்கொண்டனர். அப்போது விசாரனையில் திருப்பத்தூர் மாவட்டம் வெள்ள அவர் திருப்பத்தூர் மாவட்டம் வெள்ளபெரியான்வட்டம் கிராமத்தைச் சேர்ந்த குமார் 45 என்பதும் இதுபோன்ற தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் வழக்கப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இவர் இதேபோல் கந்திகுப்பம்,போச்சம்பள்ளி,ஜோலர்பேட்டை, அணைக்கட்டு போன்ற இடங்களில் தொடர் வாகனத்தில் ஈடுபட்டு குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Top Ad