வன்னியர்களின் இட ஒதுக்கீடு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 18 September 2022

வன்னியர்களின் இட ஒதுக்கீடு துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது

1987- இல் நடைபெற்ற வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் உயிர்நீத்த போராளிகளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
1987 ஆண்டு வன்னியர் சங்கம் சார்பில் இட ஒதுக்கீடுகாக மாபெரும் போராட்டம் நடைப்பெற்றது. 

இட ஒதுக்கீடுகள் இலக்கை எட்ட வேண்டும் என்பதற்காக போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த தியாகிகளுக்கு சமூக நீதி நாளான செப்டம்பர் 17ஆம் தேதி அனைவரும் அவர்களின் நினைவு தூண்களுக்கும் உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வன்னியர் சங்கத்தினரும் பாட்டாளி மக்கள் கட்சியிரும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களை தியாகிகளின் நாளாக அஞ்சலி செலுத்தினார்கள்.

சூளகிரியில் வன்னியர் சங்கத்தினரும் , பாட்டாளி மக்கள் கட்சியினரும் ஏராளமானோர் கலந்து கொண்டு உயிர் தியாகம் செய்வர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

No comments:

Post a Comment

Post Top Ad