தோட்டக்கலை துறை சார்பில் 1500 பனை விதைகள் நடப்பட்டது. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

தோட்டக்கலை துறை சார்பில் 1500 பனை விதைகள் நடப்பட்டது.

       சூளகிரி அருகே 1500 பனை              விதைகள் நடப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட விவசாய நில வரப்பு ஓரங்களில் தோட்டக்கலை துறை சார்பில் வழங்கப்பட்ட பனை விதைகள் நடப்பட்டது.
சூளகிரியில் அமைந்துள்ள தோட்டக்கலை துறை சார்பில் பனை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாரண்டப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் விவசாய நிலத்தின் வரப்பு ஓரங்களில் 1500 பனை விதைகள் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சூளகிரி தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சிவசங்கரி , மாரண்டப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவராஜ் , சூளகிரி உள்ள அன்னையின் பாதை அறக்கட்டளை நிர்வாகிகள், ஜேசிஐ சூளகிரி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு விவசாய நிலத்தில் பனை விதைகளை நடும் பணியில் ஈடுப்பட்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad