நதியின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர சாலை மறியல் - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 4 November 2022

நதியின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர சாலை மறியல்

வேப்பனப்பள்ளி அருகே மார்கண்டேயன் நதி குறுக்கே மேம்பாலம் அமைத்து தர கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சற்று பரப்பரப்பு ஏற்ப்பட்டது

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள நெடுசாலை என்னும் கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. 

இந்த கிராமத்தில் மார்க்கண்டேயன் நதி மறுகரையில் ஜே ஜே நகர், கண்ணப்பன் கொட்டாய், முத்துராமன் கொட்டாய், தண்டு மாரியம்மன் கோவில், காட்டு மாரியம்மன் கோவில், மற்றும் ஒட்டுக்கொட்டாய் என 6 கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களாக வசித்து வருகின்றனர். 

இந்த நிலையில் இந்த கிராமங்களில் சுமார் 1000 ஏக்கர் நிலப்பரப்பில் நெல், தக்காளி, கத்திரிக்காய் வெண்டைக்காய் உள்ளிட்டவைகளை விவசாயம் செய்து வருகிறனர். இந்த நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக மார்க்கண்டேயன் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் நெடுசாலை கிராமத்திலிருந்து மறுகரையில் உள்ள 6 கிராமங்களுக்கு செல்ல முடியாமலும், அந்த கிராமங்களில் இருந்து கிராம மக்கள் வெளிவர முடியாமல் தவித்து வருகின்றனர். 

மேலும் மழைக்காலங்களில் ஆற்றில் வெள்ளம் அதிகரிப்பதால் பொதுமக்கள் அவசர காலத்திற்கு மருத்துவமனைக்கு செல்லவும் மற்றும் பள்ளி குழந்தைகள் கல்லூரி மாணவ மாணவிகள் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.. மேலும் தற்போது 1000 ஏக்கர் நெல் பயிர்கள் அறுவடைக்கு தயராக உள்ள நிலையில் ஆற்றில் நீர் உள்ளதால் இயந்திரங்களை கூட கிராமத்திற்கு கொண்டு செல்ல முடியமால் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.

 இது குறித்து பல முறை கிராம மக்கள் ஊராட்சி நிர்வாகத்திடமும், மாவட்ட ஆட்சியரிடம் மூன்று நதிகள் கூடும் மார்கணடேயன் நதி குறுக்கே கிராமங்களுக்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என மனுக்களை அளித்துள்ளனர். ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கை எடுக்காததால் இன்று நெடுசாலை கிராமத்தில் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலை மறியல் ஈடுபட்டனர். தகவல் இருந்து வந்த குருபரப்பள்ளி காவல் ஆய்வாளர் முரளி மற்றும் போலிசார் அவர்களை சமாதானம் செய்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

பின்னர் உடனடியாக கிருஷ்ணகிரி பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் வேப்பனபள்ளி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சபரிநாதன், மற்றும் சீனிவாசமூர்த்தி இருவரும் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் பாலம் அமைப்பதற்கான பணிகள் அமைக்க நவடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் உறுதி அளித்த பின்னர் கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad