நள்ளிரவு சுமார் 2 மணியளவில் நடந்த இந்த கார் விபத்தில் சேலம் மாவட்டத்தை சேர்ந்த கார் தினேஷ் (30 )ஓட்டுநர் என்பவரும் , ஓசூர் நேரு நகரை சேர்ந்த நவநீதா( 38) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்து படுகாயம் அடைந்த காந்தி , கோகுல் ,பிரதீபா, மற்றும் கண்டெய்னர் லாரி ஓட்டுனர் பண்ணீர் செல்வம் ஆகியோரை போலீசார் மீட்டு சூளகிரி 24 மணிநேர இலவச அவசர சிகிச்சை மையத்தின் அனுமதிக்கப்பட்டார்.

காரில் பயணம் செய்தவர்கள் குடும்பத்துடன் அரியலூரில் உள்ள தனது உறவினர்களின் துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தங்களது வீட்டிற்கு காரில் செல்லும் போது சூளகிரியை அடுத்த சுண்டகிரி தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து சம்பவம் நடந்தது. இந்த விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment