கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனபள்ளி அருகே நாச்சிக்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட நாச்சிக்குப்பம் கூட்டு ரோடு சாலையில் பாஜக சார்பில் அரசிடம் எந்த ஒரு அனுமதியும் இன்றி அப்பகுதியில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நினைவு மண்டபம் அமைப்பதற்காக பூமி பூஜைக்கு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் முரளிதரன் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து தகவல் இருந்து வந்த வேப்பனப்பள்ளி இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் வேப்பனப்பள்ளி சப் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பாஜகவினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய அனுமதி இல்லாமல் இவ்விடத்தில் நினைவு மண்டபம் அமைக்க அனுமதி இல்லை எனவும் அரசிடம் உரிய அனுமதி பெற்று இவ்விடத்தில் நினைவு மண்டபம் கட்ட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனவும் போலீசார் பாஜக நீர்வாகிகளிடம் அறிவுறுத்தினர்.
நீண்ட நேரம் பேச்சு வார்த்தைக்கு பிறகு பாஜகவினர் பூமி பூஜைக்கான நிகழ்ச்சியை கைவிட்டு கலைந்து சென்றனர். நாச்சிகுப்பம் கூட்டு ரோடு சாலையில் இந்த சம்பவத்திற்கு 20க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டதால் பகுதியில் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment