இந்நிகழ்வில் விழிப்புணர்வு பேரணியை பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி. ஆஞ்சலின் மேரி அவர்கள் துவங்கி வைத்தார் . இந்நிகழ்வில் மற்ற ஆசிரியர்கள் திருமதி. நாகஜோதி அவர்கள், திருமதி. ஸ்ரீதேவி அவர்கள் மற்றும் திரு. வீரபத்திரன் அவர்கள் கலந்துக் கொண்டனர்கள்.

இவ்விழிப்புணர்வு பேரணியில் குழந்தை தின உறுதி மொழி ஏற்கப்பட்டது. கல்வியின் முக்கியத்துவம், குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைப்பெற்றது. மற்றும் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பேரணியை அசோக் லேலண்ட் RTS திட்ட பணியாளர்கள் திரு.வெங்கடேசன் - Project Associate -Social Development மற்றும் திருமதி. யாஸ்மின் -Resoure Person ஆகியோர் ஒருங்கிணைத்து கிராம ஊர் பொது மக்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் குழந்தை திருமணத்தை தடுத்தல் பற்றியும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
No comments:
Post a Comment