அரசம்பட்டி அருகே நீர்வழி பாதையை ஆக்கிமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம் : அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 15 November 2022

அரசம்பட்டி அருகே நீர்வழி பாதையை ஆக்கிமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் இடித்து அகற்றம் : அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி அருகே உள்ள மஞ்சுமேடு கிராமத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வழி பாதையை மஞ்சமேடு கிராமத்தை சேர்ந்த கிராம மக்கள் ஆக்கிரமிப்பு செய்து வீடுகள், மாட்டு கொட்டகை மற்றும் கழிவறை ஆகியவற்றை கட்டி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரது மகன் தனசேகர் என்பவர் கிராம மக்கள் பொது வழிபாதையை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தீர்ப்பின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர் ஆகிய மூன்று பேருக்கும் நீதிமன்றம் விசாரணை நடத்தி மூன்று நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 


அதனடிப்படையில் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் உத்தரவின் பேரில், வருவாய்த்துறையினர் அளவீடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இன்று காவல்துறை வருவாய்த்துறை பொதுப்பணித்துறை மற்றும் மின்சார துறையினர் முன்னிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட்டிருந்த கட்டிடங்களை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடித்து அகற்றினர். 


இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் திருப்பத்தூர் தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து வந்த போலீசார் அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் ஆக்கரமிக்கப்பட்ட கட்டிடங்கள் அனைத்தும் அக்கற்றப்பட்டது. 

No comments:

Post a Comment

Post Top Ad