"சூளகிரி அருகே ஒரே பிரசவத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசு : பொதுமக்கள் கன்றுகளை வியப்புடன் பார்த்து செல்கின்றனர்"
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பிள்ளைகொத்தூர் கிராமத்தை சேர்ந்த ராகவன் - ரூபா என்ற தம்பதிகள் , பிள்ளைகொத்தூர் கிராமத்தில் ஆடு, மாடு , உள்ளிட்ட கால்நடைகளை வைத்து விவசாயம் செய்து வருகின்றனர்.
ராகவன் - ரூபா தம்பதிகளின் பசுமாடு ஒரே சமயத்தில் 2 ஆண் கன்றுகளை ஈன்றது .
பெரும்பாலான பசுமாடுகள் ஒரே சமயத்தில் 2 கன்றுகளை ஈன்றுவது மிக அரிது எனவும் , தற்போது பசுமாடு ஈன்றுள்ள 2 ஆண் கன்றுகளும் நலமுடன் ஆரோக்கியமாக உள்ளதாக பசுமாட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மேலும் பசுமாடு ஒரே சமயத்தில் 2 கன்றுகளை ஈன்றதை பொதுமக்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.
No comments:
Post a Comment