*சூளகிரி அருகே மலை தேனி கொட்டியதில் படுகாயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி பலி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்*
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த கானலட்டி கிராமத்தை சேர்ந்தவர் முதியவர் முனியப்பன்.
கூலி தொழிலாளியான இவர் நேற்று முன் தினம் தனது நண்பர்கள் உடன் செக்கார்லு மலையில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு வரும்பொழுது திடீரென மலை தேனீக்கள் கடித்துள்ளது.
நான்கு பேரையும் துரத்தி வந்து மலை தேனீக்கள் கொட்டியதில் முனியப்பன் மட்டும் தலை, கை, கால்கள் என உடல் முழுவதும் வீங்கி பலத்த காயமடைந்தார்.
இதனையடுத்து தகவலறிந்த முனியப்பன் மனைவி 108 ஆம்புலன்ஸ் மூலம் முனியப்பனை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அழைத்து சென்றார்.
அங்கு முனியப்பனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த முனியப்பன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவிலுக்கு சென்ற முதியவர் தேனீக்கள் கொட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment