சூளகிரி ரெட் கிராஸ் சொசைட்டி கிளைக்கு அனுப்பிய 300 சுகாதார பெட்டிகள்! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 April 2023

சூளகிரி ரெட் கிராஸ் சொசைட்டி கிளைக்கு அனுப்பிய 300 சுகாதார பெட்டிகள்!

காவேரிப்பட்டணம் ரெட் கிராஸ் சொசைட்டி கிளைக்கு அனுப்பிய 300 சுகாதார பெட்டிகளை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 8 தாலுக்காவிலும் பிரித்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. காவேரிப்பட்டினம் கிளை செயலாளர் N.செந்தில்குமார் தலைமையிலான குழுவினர் 11.04.2023 செவ்வாய் கிழமை சூளகிரி தாலுக்கா கோட்டைத்தெரு, வாணியர் தெரு மற்றும் பெல்லட்டி கிராமம் ஆகிய பகுதிகளில் வழங்கப்பட்டது. வட்டாட்சியர் ஆலோசனை படி கிராம நிர்வாக அலுவலர்களால் அடையாளம் காணப்பட்ட ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த பணிகளில் இந்தியன் ரெட் கிராஸ் சூளகிரி கிளை தலைவர் & வட்டாட்சியர் திருமதி.பன்னீர்செல்வி,செயலாளர் திரு.மு.சம்பத்குமார், சூளகிரி கிராம நிர்வாக அலுவலர் திரு.அகிலன், கோட்டைத்தெரு தன்னார்வலர் திரு.தமிழ்ச்செல்வன் சேர்மன் திரு கணேசன், துணை சேர்மன் திரு.தி.குமார், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad