சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் 'வீலிங்' வாகன ஓட்டிகள் அச்சம்! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 April 2023

சூளகிரி தேசிய நெடுஞ்சாலையில் 'வீலிங்' வாகன ஓட்டிகள் அச்சம்!


சூளகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் மீண்டும் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள். போலீசார் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை

கிருஷ்ணகிரி மாவட்டம் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சூளகிரி ஓசூர் குந்தாரப்பள்ளி குருபரப்பள்ளி ஆகிய பகுதியில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் சாகசம் ஈடுப்படும் சம்பவம் அடிக்கடி தொடர்ந்து வருகிறது. இது போன்ற கடந்த வாரம் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுப்பட்ட இளைஞர்கள் விபத்துகுள்ளாகி இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்வி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். 

இந்த நிலையில் இன்று மாலை மீண்டும் சூளகிரி அருகே பட்டப்பகலில் சென்னை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்ட சாகசம் செய்ததால் பகுதியில் வந்த வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

இதுபோன்று இளைஞர்கள் சிலர் இரவு நேரங்களிலும் பகல் நேரங்களிலும் பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபடுவதால் பல பொதுமக்கள் மற்றும் இளைஞர்களின் உயிர் சேதங்களும் படுகாயம் அடைந்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது. உடனடியாக போலீசார் ரோந்து பணி ஈடுபட்டு இதுபோன்று பைக் ரேஸ் சாகசத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad