சூளகிரி அருகே கல்லூரி பேருந்து மோதி இளைஞர் பலி! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 27 April 2023

சூளகிரி அருகே கல்லூரி பேருந்து மோதி இளைஞர் பலி!

*சூளகிரி அருகே கல்லூரி பேருந்து மோதி வாலிபர் உயிரிழிப்பு. உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு*

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன் 38 கூலி வேலை செய்து வருகிறார். 

இன்று மாலை ஓசூரில் இருந்து தனது கிராமத்திற்கு செல்ல தனது இருசக்கர வாகனத்தில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது சப்படி கிராமத்தின் அருகே வளைவு பகுதியில் சாலையை கடக்கும் இயன்ற போது பின்னே வந்த தனியார் கல்லூரி பேருந்து அவர் மீது மோதியது.  

இதில் சீனிவாசன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

தகவல் அறிந்து வந்த சீனிவாசனின் உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் சீனிவாசனின் உடலை எடுக்க விடாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

பின்னர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சூளகிரி போலீசார் சீனிவாசனின் குடும்பத்தினரிடமும் உறவினர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். பின்னர் சீனிவாசனின் உடலை கைப்பற்றிய சூளகிரி போலீசார் உடல் பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.

 மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 இந்த விபத்தால் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments:

Post a Comment

Post Top Ad