சூளகிரி அருகே சாலை தரம் உயர்த்த பூமி பூஜை: அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்றார்.! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 27 April 2023

சூளகிரி அருகே சாலை தரம் உயர்த்த பூமி பூஜை: அமைச்சர் ஆர் காந்தி பங்கேற்றார்.!

சூளகிரி அருகே ரூபாய் 2 கோடியே 55 இலட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய சாலைக்கு தரம் உயர்த்தும் பணிகாக திமுக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த பாத்தகோட்ட கிராமத்தில் இருந்து டி.குருப்பரப்பள்ளி கிராமம் வரை தற்போது உள்ள ஊராட்சி ஒன்றிய சாலையை தரம் உயர்த்தும் பணிக்காக திமுக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

பாத்தகோட்ட கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய சாலையை இதர மாவட்ட சாலையாக தரம் உயர்த்தும் பணிகளுக்கு ரூபாய் 2 கோடி 55 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது

இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார், மற்றும் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநில இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, மற்றும் வேப்பனஹள்ளி முன்னால் சட்டமன்ற உறுப்பினர் முருகன் மற்றும் வட்டார வளர்ச்சி துறை, மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad