சூளகிரியில் அவசர சிகிச்சை மையத்திற்க்கு பூட்டு ! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 25 April 2023

சூளகிரியில் அவசர சிகிச்சை மையத்திற்க்கு பூட்டு !

     கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேலுமலை கனவாய் முதல் கோபசந்திரம் வரை தேசிய நெடுஞ்சாலை தமிழகத்திலே அதிக விபத்துகள் ஏற்பட்டு வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் விபத்துகளை தடுத்து உயிர்களை காப்பாற்றிட கடந்த அதிமுக ஆட்சியில் 2021 ஆண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்களால் சூளகிரியில் 108ன் 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் காணொலி மூலமாக திறந்து வைக்கப்பட்டது.

வாகன விபத்துகள் மற்றும் உயிருக்கு போராடும் நபர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு இந்த 24 மணிநேர அவசர சிகிச்சை பிரிவில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுகிறது.

இந்த மையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு முதல் தற்போது வரை தற்கொலை முயற்சிகள்‌ மற்றும் சாலை விபத்துகளில் இருந்து 4000 மேற்பட்டவர்களை இந்த மையம் காப்பாற்றி உள்ளது என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த 108 ன் 24 மணிநேர அவசர சிகிச்சை மையம் மூடபடுவதாக தகவல்கள் வெளியானதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அரிந்த சூளகிரி அனைத்து அரசியல் கட்சியினருக்கும் , வாகன ஓட்டிகளுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இந்த மையம் சூளகிரி பகுதிகளில் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மறுவாழ்வு அளித்த இந்த மையத்தை மூடப்பட்டால் அரசியல் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அரசியல் கட்சியினரும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment

Post Top Ad