*சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை விபத்தில் வடமாநில இளைஞர் சம்பவ இடத்திலே உடல் சிதைந்து உயிரிழந்தார்*
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த கோனேரிப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் வடமாநில இளைஞர் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
சூளகிரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் நண்பர்களுடன் மது அருந்த சென்றதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் மது அருந்திவிட்டு மீண்டும் இருப்பிடத்திறக்கு செல்லும் போது சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக தனியார் பேருந்து மோதி வடமாநில இளைஞர் உடல்் தூக்கி வீசப்பட்டது.
தகவலை அரிந்த சூளகிரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சாலை விபத்து சம்பவம் குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment