அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் !!! குடிநீர் இன்றி தவிர்க்கும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்??? - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 4 September 2023

அரசு அதிகாரிகளின் கவனக்குறைவால் !!! குடிநீர் இன்றி தவிர்க்கும் பொதுமக்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்???


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் வாலிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட அரசு பள்ளி அருகில் இருக்கும் தரைத் தொட்டிக்கு முழுமையான கொள்ளளவு தண்ணீர் இருந்தும் மேல்நிலை தேக்க தொட்டிக்கு நீர் ஏற்ற முடியாத அவல நிலை இதைப்பற்றி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்த போதும்முறையான எந்தஒரு பதில்லும் பொதுமக்களுக்கு அளிக்கவில்லை.

குடிநீரை மேல்நிலை தேக்கத்தோட்டிற்கு பராமரிக்கும் பராமரிப்பாளர் (காளியப்பன்) என்பவர்இடம் கேட்டபோது மின்சார வாரியத்தில் முழுமையாக மின்சாரம் கொடுப்பதில்லை என்று ஒரு தவறான தகவலை பொதுமக்களிடம் பரப்பி வருகிறார் மேலும் இந்த மேல்நிலைத் தேக்கத்தொட்டி இருக்கும் இடம் வாலிப்பட்டி ஊராட்சி (சாலூர் கிராமம்) இந்த மேல்நிலை நீர் திறக்க தொட்டிக்கு நீரேற்றும் பராமரிப்பாளர் போச்சம்பள்ளி அருகில் இருப்பதால் முழுமையாக இந்த மேல்நிலை தேக்க தொட்டியை இவரால் பராமரிக்க முடியவில்லை பொதுமக்களுக்கு குடிநீரும் வழங்க முடியவில்லை என்பது ஒரு கேள்விக்குறியான விஷயமாக உள்ளது.

மேலும் இதைப்பற்றி ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது முன்னுக்குப் பிண் முரணான பதிலை கொடுத்து வருகிறார் இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டியை நம்பி சுமார்100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகிறார்கள் ஆனால் அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் இக்கிராமங்களுக்கு முறையான தண்ணீர் இல்லை என்பது மிகவும் வருந்த கூடிய செயலாக உள்ளது உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரோ அல்லது வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கு இருக்கும் பொது மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு இங்கு இருக்கும் கிராம மக்களுக்கு சிரமம் இன்றி தண்ணீர் வர ஏற்பாடு செய்யப்படுமா என்பது இங்கு இருக்கும் பள்ளி மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பாக உள்ளது.


மேலும் இவர்கள் குடிநீரின்றி முதியோர்கள் மற்றும் சிறுபிள்ளைகள் கூட சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றது தான் தண்ணீர் கொண்டு வந்து வாழ்வாதாரத்தை பெருக்கி வருகிறார்கள் எனவே தங்கு தடையின்றி இங்கு இருக்கும் பொது மக்களுக்கு முறையானகுடிநீர் வழங்க உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் வேண்டுகோளாக உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad