![]() |
மாதிரி படம். |
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் கொடமாண்டப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வண்டிகானூர் கிராமத்தில் சேர்ந்த சுலேக்சனா - ரவி இவர் பொக்லின் ஆபரேட்டராக வேலை செய்து வந்த நிலையில் இவரது மகள் கிரிஜா வயது 16 இவர் தனியார் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்தார் தசரா விடுமுறை என்பதால் வீட்டில் இருந்த நிலையில் நண்பர்களிடம் செல்போனில் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தை தனது தாயார் கண்டித்ததாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த சிறுமி நேற்று இரவு சுமார் 10.30 மணி அளவில் தனது வீட்டு அருகில் இருக்கும் மாட்டு கூரைக்கொட்டாயில் தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார் மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் பிரதத்தை கைப்பற்றி மத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளனர்.
இதைப் பற்றி வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர் இது இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்
No comments:
Post a Comment