ஊத்தங்கரையில் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 24 October 2023

ஊத்தங்கரையில் மருது பாண்டியர்கள் 222 வது குருபூஜை விழா.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கம் சார்பில் முதல் இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்கள், மாமன்னர் மருது பாண்டியர்களின் 222 வது குருபூஜை விழா, ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் செவ்வாய்க்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக வண்டிக்காரன் கொட்டாய், நாட்டான்மை கொட்டாய், அப்பிநாயக்கன்பட்டி, கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். அதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பில் மாமன்னர் மருதுபாண்டியர்களின், திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பட்டாசு வெடித்து கொண்டாடினர்.


நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை அகமுடையார் நலச் சங்கத் தலைவர் நல்லாசிரியர் ஆர். தர்மலிங்கம் தலைமை வகித்து கொடியேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தொழிலதிபர் த.கோபி, அகமுடையார் நலச் சங்க செயலாளர் கு.பழனி, பொருளாளர் ஆறுமுகம், சுரேஷ்,ரஜினிசங்கர் ,ஊர் நாட்டார்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினர் டாக்டர் செல்லக்குமார், காங்கிரஸ் கட்சி மாநில செயலாளர் ஆறுமுகம், வட்டார தலைவர் திருமால், நகரத் தலைவர் விஜயகுமார், திமுக மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் மதியழகன், திமுக மத்திய ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், வடக்கு ஒன்றிய செயலாளர் குமரேசன் தெற்கு ஒன்றிய செயலாளர் ரஜினி செல்வம், நகர செயலாளர் பாபு சிவகுமார், ஊத்தங்கரை பேரூராட்சித் தலைவர் அமானுல்லா, ஊத்தங்கரை ஒன்றிய குழு தலைவர் உஷாராணி, ஊத்தங்கரை அதிமுக சட்டபேரவை உறுப்பினர் டி.எம். தமிழ்செல்வம், ஒன்றிய செயலாளர் வடக்கு வேடி, தெற்கு வேங்கன், மாவட்டத் துணைச் செயலாளர் சாகுல் அமீது, நகர செயலாளர் சிக்னல் ஆறுமுகம்,  பாஜக மாவட்ட தலைவர் சிவப்பிரகாஷ், மாவட்டச் செயலாளர் வரதன், சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் எம் ஆர் ராஜேந்திரன், பாஜக நிர்வாகி ஜெயராமன், பேரூராட்சி துணைத் தலைவர் கலைமகள் தீபக், அம்மா மக்கள் முன்னேற்ற கழக தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சிவக்குமார், நகர செயலாளர் சுரேஷ்,   தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் நெப்போலியன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு, மருது பாண்டியர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 


நிகழ்ச்சியில் அகமுடையார் நலச் சங்க இளைஞர்கள் அறிவழகன், தென்னரசு, கார்த்திக், பழனி, சரண்குமார், இளவரசன், பிரவீன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 1000க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad