ஊராட்சி செயலாளரின் கவனக்குறைவால், அரசாங்க சொத்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அவல நிலை??? - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 2 October 2023

ஊராட்சி செயலாளரின் கவனக்குறைவால், அரசாங்க சொத்து பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் அவல நிலை???


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களுக்கு துப்புரவு பணியாளர்களுக்கு என்று மின்சார வாகனங்கள் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளன இதனால் பொதுப்பணியில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு பணி சுமை குறையும் என்பதற்காக வழங்கப்பட்டுள்ளது ஆனால் அந்தேரிப்பட்டி ஊராட்சியில் இருக்கும் ஊராட்சி செயலாளர் அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள வாகனங்களை ஊராட்சி மன்ற தலைவர் அவர் வீட்டு அருகில் ஒன்றும் புளிய மரத்தடியில் ஒன்றும் நிறுத்தி வைத்துள்ளார்.

இதனால் அரசாங்கம் கொடுத்துள்ள மின்சார வாகனங்கள் பழுதாகி அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படும் வகையில் உள்ளது இதனால் உடனடியாக மாவட்ட ஆட்சித் தலைவரும் வட்டார வளர்ச்சி அலுவலரும் அந்தேரிப்பட்டி ஊராட்சியை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் மேலும் ஊராட்சி செயலாளர் பூபதி கிராம சபை கூட்டங்களை தலைவருக்கு சாதகமாக அவர்கள் சொந்த ஊரிலே நடத்துவதற்கு அனுமதி அளித்துள்ளார் என்பது வாடிக்கையாக உள்ளது.


இந்த ஊராட்சியில் சுமார் 3500 வாக்குகள் கொண்ட ஊராட்சியாகும் ஆனால் ஊராட்சி மன்ற தலைவரும் ஊராட்சி செயலாளரும் அவர்களுக்கு சாதகமாக அவர்கள் சொந்த ஊரிலே கிராம சபை கூட்டம் நடத்துவது கேள்விக்குறியாக உள்ளது ஒவ்வொரு வார்டிலும் ஒவ்வொரு முறை கிராம சபை கூட்டம் நடைபெற்றால் தான் அந்த வார்டில் பொதுமக்கள் பிரச்சனை என்ன என்பது தெரியவரும் ஆனால் இவர்களோ தங்களின் சுயலாபத்திற்காக சொந்த ஊரிலே கிராமசபை கூட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது எனவே மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஊராட்சி செயலாளர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது இங்கு இருக்கும் வாக்காளர்களின் வேண்டுகோளகவும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாகவும் உள்ளது நிறைவேற்று வர மாவட்ட ஆட்சித் தலைவர்????


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன் 

No comments:

Post a Comment

Post Top Ad