அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் பயணிகள் அவதி. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 12 October 2023

அரசு பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் பயணிகள் அவதி.


பெங்களூரில் இருந்து வந்தவாசி சென்ற  திருவண்ணாமலை அரசு போக்குவரத்து கழகத்தில் இயங்கும் வந்தவாசி பணிமனைக்கு உட்பட்ட அரசு பேருந்து, இன்று ஊத்தங்கரை அருகே கல்லாவி பிரிவு சாலையில் பேருந்தை நிறுத்துமாறு நடத்துனர் மற்றும் ஓட்டுநர் இருவரிடமும் பயணிகள் சிலர் கூறினர், ஆனால் ஓட்டுநர் பஸ் நிறுத்தத்தை விட்டு மாற்று நிறுத்தத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டார், இதைப்பற்றி சமூக ஆர்வலர்கள் நடத்துனர் மற்றும் ஓட்டுநர்களிடம் கேட்டபோது, நான் பெங்களூரில் இருந்து வந்தவாசி சென்று கொண்டிருக்கிறேன், தொடர் பனிசுமையால் அசந்து சற்று தூங்கி விட்டேன், மேலும் எனக்கு காது கேளாண்மையால் பயணிகள் பேருந்தை நிறுத்த சொன்னது எனக்கு கேட்கவில்லை ஆகவே என்னால் பேருந்து இயக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதால் என்னால் முடியவில்லை என்று கூறினார் ஓட்டுநர், இதை கேட்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


எனவே இந்த பணிமனையில் பணிபுரியும் ஓட்டுநர் மீது பயணி சீட்டை வைத்து இவரை அடையாளம் கண்டு முறையான மருத்துவ சான்றிதழ் பெற்ற பின் இவருக்கு வாகனம் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள் நிறைவேற்றுவார்களா போக்குவரத்து துறை இதுஉயிர் சம்மந்தம் என்பதால் பொதுமக்களும் எதிர்பார்ப்பு.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ். சத்தியநாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad