கிராமபுற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி வழங்கும் பிரபல தொழில் நிறுவனம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday 29 October 2023

கிராமபுற அரசு பள்ளி மாணவர்களுக்கு ஹாக்கி பயிற்சி வழங்கும் பிரபல தொழில் நிறுவனம்.


கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலை மூலமாக 20-இலட்சம்  ரூபாய் மதிப்பில் அரசு பள்ளிகளில் ஹாக்கி விளையாட்டு பயிற்சி மற்றும் விளையாட்டு பயிற்சி உபகரணங்கள்  அளிக்கும் பிரபல தனியார் நிறுவனம். "CHEYYAR SEZ. DEVELOPERS PRIVATE LIMITED AND FAIRWAY ENTERPRISES COMPANY LIMITED என்கிற நிறுவனம் விளையாட்டு பயிற்சிகளை அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு அளித்து ஊக்கமளிக்கும் நோக்கத்தில் பிரபல விளையாட்டு பயிற்சி நிறுவனமான BEYOND SPORTS ACADEMY. மூலமாக முதல் கட்டமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  நாகரசம்பட்டி ஆண்கள் மேல்நிலை பள்ளி மற்றும் புளியம்பட்டி  பெண்கள் மேல்நிலை பள்ளி  ஆகிய 2.பள்ளிகளை தேர்வுசெய்து ரூபாய் 20இலட்சம் மதிப்பிலான ஹாக்கி விளையாட்டு பயிற்சியின் தொடக்க விழாவினை நாகரசம்பட்டி ஆண்கள் மேல்நிலைபள்ளியில் கடந்த 27.10.2023 தொடங்கி வைக்கபட்டது.                                                                 


இந்த ஹாக்கி பயிற்சியை திரு.அருள்சம்பந்தம் (Vice president - CHEYYAR SEZ developers private limited and Fairway enterprises company limited - pochempalli) அவர்களால் துவக்கி வைக்கபட்டது. இந்நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளர்களாக கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு பயிற்சி அலுவலர் திரு.மகேஷ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் திருமதி.மணிமேகலை, ஹாக்கி Sports secretry திரு. ஞானசேகர் மற்றும் புளியம்பட்டி அரசு பெண்கள்மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.அருள்மணி, நாகரசம்பட்டி ஆண்கள் மேநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு.முருகன் மற்றும் இருபள்ளி PTA -தலைவர்கள் மற்றும் SMC. குழு உறுப்பினர்கள் ஊராட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு  சிறப்புரையாற்றினர்.   

தொடக்க விழாவினை தொடர்ந்து விளையாட்டு போட்டிகள் நடைப்பெற்றது, இதில் கிருஷ்ணகிரி மாவட்ட 8 அரசு பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர், இதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசு கேடயங்கள் வழங்கபட்டது. இப்பயிர்ச்சியில் கலந்துகொல்லும்  மாணவர்களுக்கு சத்தான NUTRITION FOODS உணவுகள் வழங்கபடும், மேலும் இப்பயிற்சி மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை இப்பள்ளிகளிலே  ஹாக்கி பயிற்ச்சி வழங்கப்படும். 

தற்போது Sports Association. மூலமும் இணைந்து பயிற்சி அளித்து வருகிறது, ஹாக்கி பயிற்சி பெறும் மாணவ - மாணவியர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், கருவிகள் வழங்கபடுகிறது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்யநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad