போச்சம்பள்ளி பகுதிகளில் தொடரும் செல்போன் திருட்டு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 26 October 2023

போச்சம்பள்ளி பகுதிகளில் தொடரும் செல்போன் திருட்டு.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இன்று ஒரே நாளில் மூன்று பேரிடம் மொபைல் திருடப்பட்டுள்ளது அதேபோல் நேற்று மத்தூர் பேருந்து நிலையத்தில் ஒருவரிடமும் மொபைல் திருடப்பட்டது குறிப்பிடத்தக்கது 24 மணி நேரத்தில் நான்கு பேரிடம் அடுத்தடுத்து தொடர்ந்து செல்போன்கள் திருடு போனது மிகவும் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் மத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிக்கடி திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது பொதுமக்களிடம் ஓர் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றது.


குறிப்பாக ஒரு மாதத்திற்கு முன்பு அந்தேரி பட்டி ஊராட்சி அந்தேரி பட்டி கிராமத்தைச் சேர்ந்த நபர் தனது விவசாய நிலத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மதிப்பு கொண்ட இரு மாடுகள் தனது நிலத்தில் கட்டி வந்து பாதுகாத்து வந்தார் ஆனால் அது திருடு போனது இதைப்பற்றி மத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இது நாள் வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளாதது மிகவும் வருத்தத்தில் பொதுமக்கள் உள்ளார்கள்.


மேலும் இதைப்பற்றி புகார் தெரிவித்த நிலையில் செல்போன் திருடுபோன நபர்களுக்கு எந்த ஒரு முறையான பதிலும் இல்லாததால் பொதுமக்கள் பாதுகாப்பு என்று கருதப்படும் காவல்துறையினர் மீது மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர் மேலும் புகார் தெரிவித்தா நபர் அனைத்து ஆவணங்களை கொடுத்தும் தனது செல்போனை கண்டுபிடித்து தருவதற்கு எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பது பறிகொடுத்த நபர்கள் வேதனைக்கு உள்ளாகி வருகிறார்கள்.


எனவே சம்பந்தப்பட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் மத்தூர் காவல் நிலையத்தின் மீது தங்களது கனிவான பார்வை செலுத்தி பொதுமக்களின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்புகொண்டது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad