நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கால் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துகள்!!!! - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 13 November 2023

நெடுஞ்சாலை துறையின் அலட்சிய போக்கால் தொடர்ந்து நடைபெற்று வரும் விபத்துகள்!!!!


கிருஷ்ணகிரி மாவட்டத்தில்  கிருஷ்ணகிரி முதல் திண்டிவனம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்ததாரர்கள் முறையான வேகதடை, மற்றும் பேரிகார்டு அமைக்காததாலும், தாமதமாக நடைபெறும் நெடுஞ்சாலைத்துறை பணிகளாலும் தொடர்ந்து விபத்து நடைபெற்று வருகிறது !!

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் அந்தேரிப்பட்டி ஊராட்சி மத்தூர் முதல் சிங்காரப்பேட்டை வரை தேசிய நெடுஞ்சாலை பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதால் வாகனங்கள் சிரமத்துக்குள்ளாகி விபத்துக்களில் பயணிகள் சிக்கி உயிர் இழப்பு ஏற்பட்டு வருகிறது, இதற்கு காரணம் தேசிய நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரர்கள் முறையாக சாலைபணிகள் மேற்கொள்ளததும், தொய்வாக நடை பெறுவதும், பணிகள் நடைபெறும் இடத்தில் எந்த ஒரு பாதுகாப்பு முன்னறிவிப்பும் இன்றி சாலையை இயல்பாக செயல்பட வைக்கின்றனர்.


இதனால்    வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் இச்சாலையின் தன்மை அறியாமல் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி உயிர் சேதம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டு வருகின்றது, இதற்கு உதாரணமாக தீபாவளி நாளில் பெங்களூரில் இருந்து பாண்டிச்சேரி சென்ற சொகுசு கார் நேற்று அதிகாலை விபத்துக்குள்ளானது, இதில் பயணம் செய்த நபர்கள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள் இதற்கு காரணம் இந்த வாகனம் சென்று கொண்டு இருந்த இடத்தில் பிரிவு சாலை வருவதால் நெடுஞ்சாலை துறை பணி செய்யும் ஒப்பந்ததாரர்கள்  இந்த இடத்தில் விபத்து ஏற்படும் பகுதி என்று எந்த ஒரு அறிவிப்பு பலகையும் வைக்கவில்லை, இதனால் இந்த சொகுசு கார் விபத்துக்குள்ளாகி இதில் பயணம் செய்த பயணிகள் அதிர்ஷ்டவசமாக காயங்கள் ஏற்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு சென்று உயிர் தப்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இச்சாலையின் முழு பணியும் நிறைவேற்றப்படாமல் அதிவேக வரம்பிற்கு வாகனங்களை இயக்க நடவடிக்கை மேற்கொண்டு வரும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மற்றும் சாலையின் ஒப்பந்ததாரர்கள் இச்சாலை பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில் உள்ளதால் வாகனங்களை அதிவேகமாக இயக்க அனுமதி இல்லாதால் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் அதிக வேகங்களில் வாகனங்களை இயக்க அனுமதி வழங்கி  ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்று உயிர் சேதம் ஏற்பட்டால் இச்சாலையின் ஒப்பந்ததாரர்கள் மீது விபத்து நடந்த அதிகாரத்திற்கு உட்பட்ட காவல்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து உயிர் சேதம் ஏற்பட்ட நபர்களுக்கு உரிய இழப்பீடு ஒப்பந்ததாரர்களை இவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வழிவகையில் காவல்துறையினர் வழக்குப் பதிய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது, 


இதை உடனடியாக நெடுஞ்சாலை துறை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவரும் பொறுப்பு ஏற்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோளாக உள்ளது நடவடிக்கை எடுப்பார்களா???


- கிருஷ்ணகிரிமாவட்ட செய்தியாளர் எஸ். சத்திய நாராயணன்

No comments:

Post a Comment

Post Top Ad