வெல்டிங் நிறுவனங்களின் லாபத்திற்காக துணை போகும் மின்சார வாரியம் கண்டு கொள்வாரா தலைமை மின்சார வாரிய அலுவலர். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 6 November 2023

வெல்டிங் நிறுவனங்களின் லாபத்திற்காக துணை போகும் மின்சார வாரியம் கண்டு கொள்வாரா தலைமை மின்சார வாரிய அலுவலர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெல்டிங் நிறுவனங்களின் லாபத்திற்காக துணை போகும் மின்சார வாரியம் கண்டு கொள்வாரா தலைமை மின்சார வாரிய அலுவலர்.


கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் ஒன்றியம் சாமல்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வெல்டிங் கடை நடத்தி வருபவர்கள் தங்களது சுயலாபத்திற்காக கிராமங்களுக்கு சென்று தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலர் அலுவலர்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு அரசு வழங்கப்பட்ட மும்முனை மின்சாரம் மற்றும் மின்சார ஒயர்களில் இருந்து இணைப்பு இணைத்து தங்களது தொழில் தொடங்கும் நோக்கத்திற்காக திருட்டு மின்சாரம் திருடுபடுவதாக பொதுமக்கள் குற்றம், இவர்கள் செய்யும் செயலால் வீடுகளுக்கு டியூப் லைட்டுகள் பழுதடைவது, டிவி பழுது அடைவது மற்றும் ஃப்ரிட்ஜ் வாஷிங் மெஷின் பழுது அடைவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.


ஏனென்றால் முறையான ஒரு தகவல் இன்றி மின்சார உயர் மின் அழுத்தம் கொண்ட  கேபிள்களில் லூப் போட்டு தங்களது  லாபத்திற்காக வெல்டிங் அடிப்பது மற்றும் அரசியல்வாதிகளின் கொள்கைகளுக்கு ஏற்ற வெல்டிங் கடைக்காரர் தலையிடுவது போன்ற செயல்களில் ஈடுபடுவதனால் பொதுமக்கள் மின்சாரம் இல்லாமல் ரேஷன் கடை பொருட்கள் வாங்குவதற்கு சிரமம்.  


எனவே இது போன்ற வெல்டிங் கடை நடத்தி வருபவர்கள் கிராமங்களுக்கு சென்று திருட்டு மின்சாரம் எடுப்பது மிகவும் தமிழக அரசுக்கு இழப்பு ஏற்பு வகையில் உள்ளது எனவே சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் அருகாமையில் இருக்கும் மின்சார வாரிய அலுவலர்களுக்கும் மாவட்ட அலுவலர் அவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் இதை உடனடியாக ஆய்வு மேற்கொள்வாரா சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள்???


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad