தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday 2 November 2023

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.


கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.

கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க வட்டத் தலைவர் அருண் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். கண்டன ஆர்ப்பாட்டத்தில், நடுப்பட்டி கிராமத்தில் வி.ஏ.ஓ., வாக பணிபுரிந்து வந்த சிவலிங்கம், கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். பணிப்பதிவேடுகளை சரியாக பராமரிக்காமல் 13 மாதம் சம்பளம் வழங்காமல் அலைக்கழித்ததன் விளைவாக, மன விரக்தியில் தற்கொலை செய்து கொண்டார்.


இவர் பணியாற்றி ஊத்தங்கரை, சூளகிரி, ஓசூர் ஆகிய மூன்று பகுதிகளில் பணிபுரிந்த அவரது, பணி பதிவேடுகளை பராமரிக்காமல்,சம்பளம் வழங்காத அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுத்து. தற்கொலை செய்து கொண்ட வி.ஏ.ஓ.,வின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும், பணி பாதுகாப்பு கோரி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் வி.ஏ.ஓ.,க்கள்  பலர் கலந்துக்கொண்டனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன்.

No comments:

Post a Comment

Post Top Ad