ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எந்த உதவியும் இன்றி தவிக்கும் நோயாளி; மருத்துக்கல்லுரிக்கு சிகிச்சைக்காக மாற்ற கோரிக்கை. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 21 November 2023

ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் எந்த உதவியும் இன்றி தவிக்கும் நோயாளி; மருத்துக்கல்லுரிக்கு சிகிச்சைக்காக மாற்ற கோரிக்கை.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சுமார் 20 நாட்களுக்குமுன்பு சாமல்பட்டி அடுத்து ஒட்டப்பட்டி கூர்சம்பட்டி பகுதியில் வசித்து வரும் திமராயன் என்பவர் தனது மகன் மருமகள் அடித்து தனது கால் முறிவு ஏற்பட்டது என்று ஊத்தங்கரை அரசுமருத்துவமனையில் உறவினர்கள் அனுமதித்துள்ளனர்.

இதில் தனது மகன் மற்றும் மருமகள் அடித்து கால் முறிவு ஏற்பட்டது என்று மருத்துவமனையில் அனுமதித்தும் இவருக்கு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முறையான அறுவை சிகிச்சை செய்யவில்லை என்பது இவரின் மனக்குமாறலாக உள்ளது, எனவே ஊத்தங்கரை தலைமை மருத்துவர் இவருக்கு இங்கு உரிய அறுவை சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும், அல்லது கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அளிக்க பரிந்துரைக்க வேண்டும், என்பது இவரின் வேண்டுகோளாக உள்ளது. 


ஊத்தங்கரை அரசு மருத்துவமனை பொதுமக்கள் மத்தியில் நற்பெயரை கொண்டுள்ளது, இதுகுறித்து ஊத்தங்கரை மருத்துவமனை  கூறுகையில், இவருக்கு இங்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது, ஆனால் திமராயன் சிகிச்சை அளிக்கவில்லை என தவறான தகவலை பரப்பி வருகின்றார் என கூறினார். ஊத்தங்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இவருக்கு அறுவை சிகிச்சை அளிக்க கிருஷ்ணகிரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்க வேண்டும், இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் திமராயன் போன்று அநாகரிக செயலில் போன்றோர்களால் தான் மருத்துவமனையின் தரம் குறையும் என்று குற்றம் சாட்டுகின்றனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன். 

No comments:

Post a Comment

Post Top Ad