கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்பு. - தமிழக குரல்™ - கிருஷ்ணகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday, 18 November 2023

கோவிலின் பூட்டை உடைத்து திருட முயன்ற நபரை பொதுமக்கள் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைப்பு.


கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து  கொல்லநாயக்கனூர் செல்லும் பிரிவு சாலை அருகே ஓம் சக்தி கோவில் உள்ளது இந்தக் கோவிலில் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்த பொழுது அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சுற்றி வளைத்து திருடனை பிடித்தனர்.


திருடனை கோவிலில் அடைத்து வைத்து காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர், விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் துறையினர் சம்பவபகுதியில் திருட முயற்சி செய்த நபரை விசாரணை மேற்கொள் கையில் பிரபல திருடன் சொட்ட சேகர் என்ற நபர் திருட வந்தது உறுதி செய்யப்பட்டது.


இந்த நபர் ஊத்தங்கரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல கோவில்களில் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது வழக்குகள் நிலுவையில்  உள்ளது குறிப்பிடத்தக்கது, திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சொட்ட சேகர்    காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் எஸ் சத்தியநாராயணன். 

No comments:

Post a Comment

Post Top Ad